ஜல்லிக்கட்டு வரலாறு

ஜல்லிக்கட்டு வரலாறு பற்றிய குறிப்புகள் :

ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று.இது பொதுவாக தென் தமிழக மாவட்டங்களில் விளையாடப்படுகிறது .ஜல்லிக்கட்டு வரலாறு பழந்தமிழ் இலக்கியமான சிந்து வெளி நாகரிகத்தில் ஏறுதழுவல் நடைபெற்றத்துக்கான சான்றுகள் உள்ளன.பொங்கல் விழா என்பற்றலே தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டோடு தான் ஒன்றிணைந்து .ஜல்லிக்கட்டுஆதரவு போரட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வெளியிலும் ,தமிழ்நாட்டிற்குள்ளும் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் போராட்டங்கள் நடைபெற்றன .

ஜல்லிக்கட்டு வறலாறு சான்று:

விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படும் வளையத்திற்கு ‘சல்லி ‘என்று பெயர் . மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கத்தில் இருந்த ‘சல்லி காசு’ என்ற இந்திய நாணயைங்களை மாட்டின் கொம்பில் துணியுடன் சேர்த்து கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும்.காலபோக்கில் ‘சல்லிக்கட்டு’ என்ற வார்த்தை பேச்சுவழக்கில் ‘ஜல்லிக்கட்டு’ என்று ஆனது. ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகளும் வீரர்களும் இறக்க கூடும் அல்லது காயம் ஏற்படக்கூடும்.கடந்த காளத்தி இதுபோன்று நிகழ்ந்திருக்கின்றது.சிறு அளவிலோ பெரும் அளவிலோ காயங்கள் ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டில் பொதும் அதை தொடர்ந்தும் காயமுற்ற 80முதல் 100பேர் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.சிறு காயமுற்றோர் ஜல்லிக்கட்டு நடைபெறுகின்ற அலங்காநல்லூர்,அவனியாபுரம் , பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் போகிறார்கள்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சின்போது மாடுபிடி வீரர்களுக்குப் பல விதங்களில் காயம் ஏற்படக்கூடும் .

1.தலை :காலையைப் பிடிக்கும் முயற்சிலை கீழே விழுவதால்,அல்லது தூக்கி எறியப்படுவதால் தலையில் அடிபடுதல்.முகத்தில் வீட்டுக் காயங்கள் ஏற்படுதல்.

2.கழுத்து :காளையின் கொம்பு குத்துவதால் விளைவாக மூச்சுக்குழாயில் துளை ஏற்படுதல்.

3.தண்டுவடம் :கீழே விழுவதாலோ,காலையால் குத்தப்படுவதாலோ தண்டுவடம் சேதமடைதல்.முதுகின் கீழ்புறத் தசை இறுக்கமுறுதல்.

ஜல்லிக்கட்டு வரலாறு வகைகள் :

வேலி ஜல்லிக்கட்டு :

வேலி ஜல்லிக்கட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன .அவை இந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறும்.

வாடிவாசல் ஜல்லிக்கட்டு :

மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச்சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குருப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.

மஞ்சுவிரட்டு :

மஞ்சு விரட்டு என்பது தமிழகத்தில்,குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கொண்டாடப்படும் விளையாட்டு.”மஞ்சி”ஏன்பது தாளை வகை கற்றாழை நார் குண்டு திரித்து தயாரிக்கப்படும் ஒரு வகை கயிறு ஆகும்.”மஞ்சி கயிற்றால் ” மாடுகளின் கொம்புகளில் கட்டப்படும் தங்க நாணயங்கள் பணமுடிப்பு,புத்தாடைகள்,சலங்கை மணிகள் ஆகியவற்றை எடுப்பதற்காக வீரர்கள் மாடுகளை விரட்டு விளையாட்டு ஆகும்.பிற்காலத்தில் “மஞ்சி” என்ற சொல் மருவி “மஞ்சு விரட்டு” ஆனது.

மஞ்சு விரட்டு விளையாட்டு.பொதுவாக அறுவடை காலம் முடியும் போது நீர் வற்றிய கண்மாய் உட்புறத்தில் “மஞ்சு விரட்டு தொழு”அமைக்கப்பட்டு அந்தத் தொழுவில் இருந்து காளைகள் கண்மாய்ப் பகுதிக்குள் திறந்து விடப்படும்.ஓடும் காளைகளை வீரர்கள் விரட்டிச்சென்று பரிசுகளை எடுப்பர்.

ஜல்லிக்கட்டு விலங்குகளைத் துன்புறுத்துவதாகக் கருதுவோரும் அண்மைய ஆண்டுகளில் ஜல்லிக்கட்டைத் தடை செய்ய கூறி இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *