தாம்பரதில் இருந்து சென்னை பீச் செல்லும் ரயில்கள் நாளை பராமரிப்பு காரணத்திற்காக 44 க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை செயல்பட உள்ளது. அதனால் மக்களின் நிலைகருதி நாளை ஒரு நாள்(25.02.24) மட்டும் கூடுதலாக பேருந்துகளை இயக்க அறிவிப்பு வெளியானது. திங்கள்கிழமை வழக்கமாக ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

பராமரிப்பு பணிகள்
தண்டவாள இணைப்புகளை சரிபார்த்தல், வெல்டிங் செய்தல், பாலாஸ்ட்கள் பேக்கிங் செய்தல், தண்டவாளத்தில் வளரும் செடிகளை அகற்றுதல் போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.