17 வது IPL கிரிக்கெட் போட்டி வருகின்ற மார்ச் 22 ம் தேதி இந்தியாவில் நடக்க உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ஐபிஎல் 17ஆவது சீசன் முன்கூட்டியே துவங்கவுள்ளது. மார்ச் 22ஆம் தேதி முதல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும்.. ஆடலும் பாடலும்..ச்சை ச்சை.. ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 22ஆம் தேதி:
தற்போதைக்கு, முதல் 21 போட்டிக்கான அட்டவணையை மட்டுமே வெளியிட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தப் பிறகு, இரண்டாவது பாதி அட்டவணையை வெளியிடுவோம் என ஐபிஎல் சேர்மன் அருண் தோமல் பேசியுள்ளார்.
முதல் போட்டி:

தற்போது வெளியாகி உள்ள அட்டவணையின் படி, முதல் லீக் ஆட்டத்தில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டூ பிளஸி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சென்னை சேப்பாக்கத்தில் மோதவுள்ளன.
ஐபிஎலில் 5 கோப்பை வென்ற அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி, நீண்ட காலமாக தக்கவைத்த நிலையில், அந்த சாதனையை கடந்த சீசன் மூலம் சிஎஸ்கே சதம் செய்தது.

இதற்குமுன், 2009, 2011, 2018, 2019, 2020, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சீசன்களில், சிஎஸ்கே முதல் போட்டியில் விளையாடியது. மும்பை இந்தியன்ஸும் இதேபோல், 9 அறிமுக போட்டிகளில் விளையாடி இருந்தன.
9ஆவது முறையாக:

இந்நிலையில், 17ஆவது சீசனிலும் சிஎஸ்கே ஓபினிங் ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதன்மூலம், ஐபிஎலில் அதிகமுறை ஓபனிங் போட்டியில் விளையாடிய அணி என்ற சாதனையை சிஎஸ்கே படைத்துள்ளது.
மற்ற அணிகள்:

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 8 முறை ஓபனிங் ஆட்டத்தில் ஆடியிருக்கும் நிலையில், கொல்கத்தா அணி 7 முறையும், பெங்களூர் அணி 5 முறையும் ஓபனிங் ஆட்டத்தில் ஆடி இருக்கின்றன.
சிஎஸ்கே போட்டிகள்:

சிஎஸ்கே முதல் போட்டியில் ஆர்சிபியை எதிர்கொள்ளும் நிலையில் மார்ச் 26ஆம் தேதி சேப்பாக்கத்தில் எதிர்கொள்ள உள்ளது. டெல்லியை மார்ச் 31ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும், ஹைதராபாத் அணியை அவங்க இடத்திலேயே, ஏப்ரல் 5ஆம் தேதி சிஎஸ்கே எதிர்கொள்ள உள்ளது.