இலவச மின்சார திட்டம் . ரூ.75,000 மானியம் ..

பிரதம மந்திரியின் சூரிய வீடு விண்ணப்பிப்பது எப்படி ?..
சென்னை: பிரதம மந்திரியின் சூரிய வீடு என்ற பெயரில் இலவச மின்சார திட்டத்தை தொடங்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அறிவித்தார். வீடுகளில் சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில் பிரதம மந்திரியின் சூரிய வீடு திட்டம் ரூ.75,000 கோடி முதலீட்டில் தொடங்க உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.
பிரதம மந்திரியின் சூரிய வீடு திட்டத்தின் கீழ் வீடுகளின் கூரையில் சோலார் (solar) பேனல்களை பொருத்திக்கொள்ளும் வீடுகளுக்கு மாதம் 300 உநிட் வேளை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட உள்ளது என நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
சூரிய மின்னாற்றல் (solar power) பிரதம மந்திரியின் சூரிய வீடு:
சூரிய மின்னாற்றல் என்பது சூரிய ஒளியில் இருந்து மின்னாற்றலை பெறுவதாகும். இது நேரடியாக ஒளிமின்னழுத்திகளின் செயல்பாட்டின் முறையிலும் மறைமுகமாகச் செறிவூட்டும் அல்லது செறிவான சூரிய ஆற்றல் (CSP) முறையிலும் பெறப்படுகிறது. செறிவூட்டல் முறையில் பரந்த அளவு சூரிய ஒளிக்கற்றைகள் வில்லைகள், மற்றும் கண்ணாடிகளைக் கொண்டு சிறிய ஒளிக்கற்றையாகக் குவிக்கப்பட்டு அதன் மூலம் நீரை ஆவியாக்க வைத்து மின்சாரம் பெறப்படுகிறது.
பிரதம மந்திரியின் சூரிய வீடு 300 யூனிட் வரை இலவசம் !
பிரதம மந்திரியின் சூரிய வீடு திட்டத்தில் தற்போது வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அரசு மானியம் தருவதால் பல வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் நிறுவனங்களில் இப்போதும் சோலார் பேனல்களை மக்கள் பொருத்தி வருகின்றன. இந்த நிலையில் தான் வீடுகளுக்கு பிரதம மந்திரியின் சூரிய வீடு திட்டத்தின் கீழ் மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் வழங்கும் வகையில்,வீட்டின் கூரையில் சூரியதா மின்சக்தி பொருத்தும் திட்டம் செயல்பட உள்ளது. மத்திய அரசின் இந்த திட்டப்படி குடியிருப்பு வீடுகளுக்கு 1 கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொருத்த ரூ.30,000 மானியம் வழங்கப்பட உள்ளது. கூடுதல் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு, கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.18,000 வீதமும், 3 கிலோவாட் வரை மொத்தம் ரூ.78,000 மானியம் வழங்கப்பட உள்ளது
பிரதம மந்திரியின் சூரிய வீடு திட்டத்தில் மாத மின் நுகர்வு வீடுகளில் சராசரியாக 150 யூனிட் வரை இருந்தால் 1 முதல் 2 கிலோவாட் திறனுள்ள சூரிய சோலார் பேனல்களை பொருத்தி ரூ.30,000 முதல் 60,000 வரை மானிய உதவி பெறலாம்.வரும் காலத்தில் மின்சாரம் தான் இந்தியாவில் மிக முக்கியமா ஒன்றாக உருவெடுக்கப்போவது மின்சாரம் தான் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதிலும் மிக முக்கியமானதாக சூரிய ஒளி மின்சாரம் தான் கணிசமான இடத்தை பிடிக்க போகிறது. ஏனெனில் சூரிய ஒளி மின்சாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பிரதம மந்திரியின் சூரிய வீடு திட்டத்தின் மூலம் நேரடியாக காலத்தில் இறங்கி உள்ளது.

பிரதம மந்திரியின் சூரிய வீடு ! திட்டத்தில் ரூபாய் 7,000 மானியம் :
மத்திய அரசின்பிரதம மந்திரியின் சூரிய வீடு திட்டப்படி குடியிருப்பு வீடுகளுக்கு 1 கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொறுத்த ரூ.30,000 மானியம் வழங்கப்பட உள்ளது. கூடுதல் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு, கிலோவாட் ஒன்றுக்கு 18,000 வீதமும்,3 கிலோவாட் வரை மொத்தம் ரூ.78,000 மானியம் பிரதம மந்திரியின் சூரிய வீடு திட்டத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த தகவல் மத்திய அரசில் சார்பில் அறிவிக்கப்பட்டு உற்சாகத்தை ஏற்படுத்தி உஉள்ளது .