மோடி மதுரைக்கு வருகிறார்!போக்குவரத்தில் மாற்றம்

பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகிறார். அதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மதுரைக்கு வரும் மோடி அவர்களின் வருகை காரணமாக இரண்டு நாள்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை வழியாக வெளியூர் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் மாற்று வழித்தடத்தில் இயங்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் வந்த மோடி! மதுரைக்கு வருகிறார்

மோடி மதுரைக்கு வருகிறார் -இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி நாளைய தினத்தில் பகல் 1.20 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கோவையில் உள்ள சூலுார் விமான படைத்தளத்துக்கு பகல் 2.30 மணிக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடத்துக்குச் செல்கிறார். பின்பு அவர் , பிற்பகல் 2.40 மணிக்கு பல்லடம் மாதப்பூர் ஊராட்சி பகுதியில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

மோடி மதுரைக்கு வருகிறார்

மோடி மதுரைக்கு வருகிறார்!எதற்கு மதுரைக்கு வருகிறார் மோடி?

பிரதமர் நரேந்திர மோடி மாலை 5 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் வழியாக மதுரை கருப்பாயூரணி வீரபாஞ்சானிலுள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளி வளாக ஹெலிபேடில் வந்திறங்குகிறார். பின்பு 5.15 மணிக்கு டிவிஎஸ் பள்ளி வளாகத்தில் நடக்கும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் பங்கேற்று பேசுகிறார்.

மதுரைக்கு வரும் மோடிக்காக பாதுகாப்பு பணி:

பிரதமரின் வருகைக்காக மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்காக சுமார் 6000 முதல் 10000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

ட்ரோன்கள் பறக்க தடை!

மதுரையில் இரண்டு நாட்களுக்கு மட்டும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறியுள்ளார். மதுரை வழியாக வெளியூர் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் மாற்று வழித்தடத்தில் இயங்கும் என்று உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் ஓய்வெடுக்கும் மோடி:

மாலை 6.45 மணிக்கு மதுரை பசுமலையிலுள்ள தாஜ் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார். பிப். 28-ம்தேதி காலை 8.15 மணிக்கு தாஜ் ஓட்டலில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர், 8.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *